பழையன என்றும் புதியன – 13

https://youtu.be/tz6s6RMvntQ

“டப்பாங்குத்துப் பாடல்கள்” என்று எங்கள் காலத்தில் நாமகரணம் செய்யப்பட்ட பல பாடல்கள், நம் மனதை லேசாக்க வைப்பதற்காக படங்களில் இடம்பெறும். இப்போது அது மருவி ”குத்துப்பாடல்கள்’ ஆகிவிட்டன. ஆனால் பார்க்கத்தான் நமக்கு சகிக்கவில்லை. அந்தக்கால அத்தகைய பாடல்கள் சிறிது பாலுணர்வுடன் இருந்தாலும், பல நேரம் பார்த்து மகிழ ஏதுவாகவும் இருக்கும். “மாமா மாமா’, என்னடி ராக்கம்மா” போன்ற பாடல்கள் அவ்வகையைச் சேர்ந்தவை. நான் குறிப்பிட்டுள்ள இந்தப்பாடல், என் கல்லூரிக் காலத்தில் மிகவும் பிரபலம். ‘பாபு’ என்ற சிவாஜி படத்தில் அவர் ஒரு ஏழை கையிழுப்பான் வண்டி ஓட்டுநராக, தனது நண்பர்களுடன் தனது காதலியைப்பற்றிப் பாடுவதாக அமைந்த காட்சி இது. மெல்லிசை மன்னரின் நம் காதுக்கு இதமான துள்ளிசையில், டி. எம். எஸ்ஸின் மென்மை கலந்த கம்பீரக் குரலில்ஒலித்தது  இப்பாடல். முக்கியமாக கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவ வரிகளுக்கும் இது புகழ் பெற்றது.

“குலாம் காதர் புலாவிலே கறி கிடக்குது; அது அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது

மேரியம்மா காரியரில் எறா இருக்குது; அது பத்மநாப ஐயர் வீட்டுக் குழம்பில் மிதக்குது

சமையல் எல்லாம் கலக்குது; அது சமத்துவத்தை வளர்க்குது

ஜாதிசமய பேதமெல்லாம் சோத்தைக் கண்டால் பறக்குது”

எளிய வரிகளில் வாழ்வியல் தத்துவம்! அக்காலத்தில் சாப்பாட்டுக் கூடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் உண்டு மிச்சம் வைத்த சாப்பாட்டைக் கலந்து ‘கதம்ப சாதம்’ என்று விற்க, அதைப் பல எளிய மக்கள் உண்ட பழக்கத்தை வைத்து, கவிஞர் அவர்கள் ஒரு வாழ்வியல் தத்துவத்தையே இப்பாடலில் வழங்கியுள்ளார். எப்படிப்பட்ட அமர்க்களமான பாடல் இது! கேட்டும் பார்த்தும் மகிழ்வீர்கள்!

 

https://youtu.be/6wc3FawIgJA

மதுப்பழக்கம் என்பது பல்லாயிரம் வருடங்களாக உள்ள ஒன்று. அதை உலகை விட்டு நீக்குவது கடினம். ஆனால் அந்தக்காலப்படங்களில் அதை ஒரு தீய பழக்கமாகவே காட்டுவார்கள். (இப்போது அந்த பாணி மாறிவிட்டது – மாறத்தானே வேண்டும்)! ஒரு காலத்தில் கதைநாயகன் குடிப்பவனாக இருந்தால் இறுதியில் திருந்தி விடுவதாகக் காட்டுவார்கள். (தேவதாஸ் மட்டும் விதி விலக்கு). ஆனால் குடித்தபின் நாயகன் பாடும் பாடல்கள் பெரும்பாலும் தத்துவமாகவே இருக்கும். அதுவும் கண்ணதாசன் பாடல் என்றாலோ, காதல் தோல்விப் பாடல் என்றாலோ, கேட்கவே வேண்டாம். அவரது சொந்த அனுபவம் கவிதையில் விளையாடும். அப்படிப்பட்ட ஒரு பாடல் இது. படம் காட்டுரோஜா; வந்த வருடம் 1963. காதல் தோல்வியால் பாடும் நாயகன் பல ஊர்களை வைத்துத் தன் நிலையைச் சொல்வதாகக் கவிஞரின் சொல் விளையாடல் இருக்கும். எஸ்.எஸ்.ஆர் மற்றும் பத்மினியின் முகபாவங்கள் காட்சிக்கு ஏற்றபடி இருக்கும். மகாதேவ மாமாவின் இசையோ அருமை. பி.பி. ஸ்ரீநிவாஸின் மதுரக்குரலில் இப்பாடல் இன்று கேட்டாலும் மனதைக் கவரும். (இவர் பாடி ‘ஹிட்’ ஆகாத பாடல் ஏதும் உள்ளதென்றால் எனக்குச் சொல்லுங்கள்.).

 

 

https://youtu.be/N40tyq7hvak

இது மற்றொரு குடிகார நாயகன் பாடல்; மறுபடியும் வாழ்வியல் தத்துவம் – காவலைப்பற்றி ; மறுபடியும் கண்ணதாசன்; மறுபடியும் பி.பி. ஸ்ரீனிவாஸ்; ஆனால் இசை மட்டும் மெல்லிசை மன்னர்கள். படம் ராமண்ணாவின் ‘மணப்பந்தல்’ வருடம் 1961. நடிப்பு அசோகன்.  ‘மௌத் ஆர்கன்’ என்ற சிறிய அக்கால இசைக்கருவி இதில் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.சோகத்தைப் பிழிந்து தரும் பாடல். இந்துஸ்தானி கவாலி போல் மனதை அசைக்கும் இது.

 

 

 

 

 

 

Advertisements

பழையன என்றும் புதியன 12

https://youtu.be/UZ-GyhPPEkY

தமிழ்த் திரையுலகின் தொடக்க காலங்களில் நடித்தவர்களுக்கு பாடத் தெரிந்திருப்பது கட்டாயம். அந்தக்கால கட்டத்தில் வந்த ஒரு மிகப் பெரிய நடிகர் தம்பதி என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் அவர்கள். கிருஷ்ணனின் அற்புதக் குரலில், பல பாடல்கள் நகைச்சவை மட்டுமின்றி கருத்துச் சுவையும் கொண்டனவாக இருக்கும். பல நல்ல சமூகக் கருத்துக்களை அவர் தன் பாடல்கள் மூலம் சொல்லியவர். 60 ஆண்டுகள் கழித்து இன்றும் அவை நம் மனதில் நிற்பதற்குக் காரணம் அதுவே. 1955 இல் திரு.பந்துலு அவர்கள் முதன் முதலில் தமிழில் தயாரித்த படம் ‘முதல் தேதி’. சிவாஜி கணேசன், அஞ்சலிதேவி, நடித்த அப்படம் நடுத்தரக் குடும்பஸ்தனின் பொருளாதாரச் சிக்கலை விளக்கும் வகையில் அமைந்தது. அப்படத்தில் வரும் கிருஷ்ணன் பாடும் இப்பாடல் அத்தகைய குடும்பத்தின் நிலையை நகைச்சுவையுடன் பிரதிபலிக்கும். கேட்டு, பார்த்து ரசிக்கவும்.

 

https://youtu.be/dassK5chWzM

‘உடுமலை நாராயண கவி’ என்னும் கவிஞர் 1950 களில் புகழ் பெற்ற தமிழ் படங்களில் பாடல்கள் எழுதியவர். குறிப்பாக, என்.எஸ். கிருஷ்ணனின் பல பாடல்கள் இவரால் எழுதப்பட்டவை. அவற்றில் ஒன்று 1955 இல் வந்த ‘டாக்டர் சாவித்திரி’ என்ற படத்தில் வந்த இப்பாடல். ஜி. ராமநாதன் இசையில் இன்று கேட்டாலும் நமக்கு புன்முறுவலை ஏற்படுத்தும். மிகவும் பலமான நல்ல கருத்துக்களை மிக எளிமையான சொற்களில் வழங்கிய அக்கால மேதைகளை எப்படிப் பாராட்டுவது – அவர்களின் இப்பாடல்களை திரும்பத் திரும்ப கேட்டு மகிழ்வதைத் தவிர?

https://youtu.be/LUzOsShOKjQ

கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனத்தில். கண்ணதாசன் வரிகளுக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைக்க, என்.எஸ். கிருஷ்ணன் இயக்கிய தமிழ் படம், “பணம்” என்னும் பெயரில் 1952 இல் திரைக்கு வந்தது. அதில் வந்த, காலத்தால் அழியாத ஒரு பாடல் “எங்கே தேடுவேன்” என்ற இப்பாடல். பணம் எப்படியெல்லாம் மோசமாக மனிதர்களால் கையாளப்பட்டது என்பதை சிரித்துக்கொண்டே சொல்லும் ஒரு பாடல் இன்றைய உலகிற்கும் அப்படியே பொருந்தும். கலைஞர் ஒருவரைத்தவிர இப்படமும் இப்பாடலும் சம்பந்தப்பட்ட ஒருவரும் இன்று நம்மிடையே இல்லை. ஆயினும் பாடலின் கருத்து மட்டும் 65  ஆண்டுகள் சென்றும், இன்றும் உயிருடன் ஜீவிக்கிறது!

 

 

 

 

 

பழையன என்றும் புதியன 11

https://youtu.be/PR90Uvteayw

https://youtu.be/_9PPrCLiRXg

அக்காலத் திரைப்படங்களில் ஒரே பாடல் இருமுறை வருவது பழக்கம். ஒரு தடவை மகிழ்ச்சியாகவும், பின்னால் அதுவே சோகமாகவும் வரும். அது போன்ற பாடல் இவை. எஸ்.வி. ரங்காராவ் என்ற அற்புதமான குணசித்ர நடிகர் தமிழ், தெலுங்கு திரையுலகில் கட்டிப்பறந்தவர். இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் பெற்ற அவரின் பெரும் ரசிகன் நான். ஆங்கிலத்தில் scene – stealer என்று சொல்வது அவருக்கு கனகச்சிதமாகப் பொருந்தும். அவருடன் நடிப்பவர் எவ்வளவு சிறந்த நடிகராக இருப்பினும், நம்மை இவர் பக்கம் திசை திருப்பி ‘ஆஹா’ என்று சொல்ல வைத்துவிடும் இவரது நடிப்பாற்றல். சுத்தமான இவரது தமிழ் உச்சரிப்பு மற்றொரு சிறப்பு. 1973 இல் திரைக்கு வந்த ‘அன்பு சகோதரர்கள்’ திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இவர் நடித்திருப்பார். பட நாயகன் பாத்திரம். கூட்டுக் குடும்பமாக தன் சகோதரர்களுடன் மகிழ்ச்சியாக வாழும், இவரது வாழ்வில் வரும் சோதனைகளே இப்படத்தின் கதை. முதல் பாதியில் தன் குடும்பத்தைப் பற்றிப் பெருமையாக அவர் பாடுவதும், பின் பாதியில் ஒரு சோக நிகழ்வின் பொது அதே பாடலை மனம் கனக்க பாடுவதும் இப்பாடலை நம் மனதை விட்டு என்றும் நீங்காமல் வைத்திருக்கும். கே.வி. மகாதேவனின் இன்னிசையில் கண்ணதாசனின் அற்புத வரிகளை திரு. கண்டசாலா அவர்கள் பாடியது மேலும் ஒரு சிறப்பு. (கண்டசாலா தமிழில் பாடிய இறுதிப்பாடலும் இதுவே).

“சொர்கத்தின் வாசல் உன்னை சொந்தம் கொள்ளத்தேடுதடா

பக்கத்தில் நானிருக்க  பாலகனை நாடுதடா

தெய்வம் உன்னை அழைப்பதனை தெரிந்தடா என் மனமே

தேவை ஒரு ஜீவன் என்றால் நான் போக சம்மதமே”

கதாபாத்திரத்தை உள்வாங்கி இப்படிப்பட்ட வரிகளைக்கொடுக்க கண்ணதாசன் போன்ற வெகு சிலராலேயே முடியும். வெறித்த பார்வையுடனும், நீர் வழியும் கண்களுடனும், ஒரு சாவைத் தடுக்க முடியாத தன் இயலாமையைக் காட்டும் ரங்காராவின் நடிப்பில் கண் கலங்காதவர்களே அன்றில்லை. இன்று பார்த்தாலும் நம் மனதை ஏதோ வகையில் சோகமாக்கும் இப்பாடலைப் பாருங்கள்.  அக்காலப் படங்களில் பாடல்கள் எவ்வளவு வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உணர்வீர்கள்.

பழையன என்றும் புதியன 10

https://youtu.be/OHgfeW4hsis

https://youtu.be/xA7wR5z2OEo

மீண்டும் தாலாட்டுக்கு  வருவோம். ஆறு மாதங்களுக்குப் பின்னர் பழைய பாடல் கனவில் நுழைய இப்போதுதான் நேரம் கிடைத்தது. எனது ஒரே ரசிகரான எனது அண்ணன் ‘ஏன் இப்போதெல்லாம் எழுதுவது இல்லை’ என்று உசுப்பி விட்டதால் வந்த விளைவு இது.

1962 இல் ஏ.வி.எம் நிறுவனத்தினரால் திரைக்கு கொடுக்கப்பட்ட ஒரு ‘கிளாசிக்’ படம் ‘அன்னை’ என்று பெயரிடப்பட்டது . கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் வசனத்தில், கண்ணதாசன் வரிகளுக்கு சுதர்சனத்தின் இசையில் உருவான இப்படம் சகலகலாவல்லி திருமதி. பானுமதியின் நடிப்புக்கு ஒரு பெரிய மைல் கல். ஒரு வங்காள மொழிக்கதையின் தழுவல் இது. பிள்ளைப் பேறு வாய்க்கப் பெறாத ஒரு பணக்கார பெண்மணியாய் அவர் தனது தங்கையின் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும்போது அவருக்கு ஏற்படும் இடர்களே கதை. இப்படத்தில் வரும் இந்தத் தாலாட்டு கதை நாயகியின் வாழ்வின் வெறுமையை வெளிப்படுத்துவதாக இருப்பதை கண்ணதாசன் எவ்வளவு அழகாக புனைந்திருப்பார்! சுதர்சனம் இசைக்கு இந்த ஒரு பாடலே ஜென்மத்திற்கும் போதும். முதலில் வரும் பாடல் சூழ்நிலையிலும், பின்னர் வரும் அதே பாடலில் வேறொரு சூழ்நிலையிலும் பானுமதியின் நடிப்பு கவிஞரின் வரிகளுடன் போட்டி போடும். எட்டு வயதில் நான் பார்த்த இப்படத்தை மீண்டும் யுவனாகப் பார்த்தபோதுதான் அக்காலப் படங்களில் வந்த பாடல்களின் முழு வலிமையை உணர முடிந்தது. திருமதி. பானுமதி தனது  குரலுக்கு அடிமையானவர்களை மீள விட்டதேயில்லை. இப்பாட்டு அதை மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிய வைத்தது. என்னைப் போன்று பலர் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல்.

 

https://youtu.be/-TVWojhI13k

‘சபாஷ் மாப்பிளை’ என்ற எம்.ஜி.ஆர், மாலினி நடித்த படம் 1961 ஜூலையில் ரிலீஸ். படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் மஹாதேவ மாமா இசையில் எல்லாப் பாடல்களும் பிரபலமானவை. சீர்காழி கோவிந்தராஜன் பல ‘ஹிட்’ பாடல்களை இதில் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று இந்தத் தாலாட்டு. மருதகாசி அவர்கள் கண்ணதாசன் காலத்தில் பல நல்ல பாடல்களை எளிய தமிழில் தந்தவர். இப்படத்தில் எல்லாப் பாடல்களும் அவரால் எழுதப்பட்டது. இந்த டூயட் தாலாட்டு அதன் நயத்தாலும், எளிமையாலும், நல்ல இசையாலும் என்னைக் கவர்ந்தது. மாலினியின் சிறு சிறு அழகு பாவங்களும் எம்.ஜி. ஆரின் அழகிய முகமும் இயற்கையான நடிப்பும் இப்பாடலை நான் ரசிப்பதற்கு மற்ற காரணிகளாகும். பாடலைப் பாருங்கள். நீங்களும் உணர்வீர்கள்!

Man made miracles!

Yesterday a VIP got two transplants from a brain dead man in a Chennai city hospital Tamilnadu. He has officially registered in the transplant registry and was put on wait list. Once a donor was available, he was given the benefit, legally. What is the miracle then? There are many questions unanswered.

  1. The boy who was poor, met with a road traffic accident in a small town in South and got admitted to a medical college hospital with multiple injuries. It is a medico-legal situation; strangely the parents got him discharged ‘against medical advice’ which is not easy, unless police clears the case to be ‘transferred’ to another bigger hospital with better facilities. In that case he would have been transferred to ‘Chennai medical college super specialty state-of the-art’ hospital. But it didn’t happen that way.
  2. The boy’s parents take him to the nearby bigger city, from where he was air-lifted by a helicopter air taxi (costing > 100000 INR – how could they afford?) to the corporate hospital at Chennai where the rich political clan VIP was hospitalized.
  3. In that corporate hospital, he was kept for a short period and declared ‘brain dead’. As per the norms, if a person is brain dead in a hospital, his organs can be donated to a deserving patient in the same hospital as a priority. The transplant registry rule of wait list doesn’t apply here! Now we can understand who is behind all these quick decisions and happenings.
  4. I would be happy if at least the poor donor soul’s parents were adequately compensated for their noble gesture; but I doubt very much that would have happened.
  5. What are the violations of legal and ethical issues here? A medico legal case has to be transferred after the police approval only, by the medical college team, which was unlikely in this case, as he was discharged against medical advice. (The case sheet could have been manipulated by the team to suit the recipient’s need). How could a poor man afford an air taxi (bill was in his name) when he brought the patient to a free govt. hospital for treatment first, when there are so any better private facilities nearby? This man’s organs could have been used for patients who were waiting for transplant for longer periods than the VIP, but were denied to get their lives back.

Violations of transplant registry norms are happening everywhere. One rich and influential VIP from my place could do it in USA, by influencing to get to the top of the wait list! VIPs are lucky to be saved by such ‘man made miracles’. Politicians, police and above all, the doctors help such VIPs because of either fear or monetary benefits. Even though a life is saved, I cannot be happy as it was done at the cost of other genuine patients who were waiting! Ethics takes a back seat as it cannot withstand the pressure exerted by VIPs. It is universal.

God save all the other poor souls!

 

P.S This article can be referred to medical personnel only as it is a good case for ethical discussion!

 

ஒருவர் மனதை ஒருவர் அறிய…..

ஒருவர் மனதை ஒருவர் அறிய

உதவும் சேவை இது

வாழ்வை, இணைக்கும் பாலமிது

இந்தப் பாடல் 60 களில் வந்த ஒரு ஜெய்சங்கர் படத்தில், அவர் தபால்காரராக பாடிக்கொண்டு செல்வதாக அமையப்பெற்றது. யோசித்துப் பார்த்தால் முன்பெல்லாம் (1970 க்கு முன் வந்த) திரைப்படங்களில் இது போன்ற சேவைகளைப் பற்றி புகழ்ந்து பாடும் பாடல்கள் வரும். அப்படி தபாலின் மகத்துவத்தை விளக்குவதாக இந்தப்பாடல் அமைந்துள்ளது. வெகு நாள் கழித்து இந்தப்பாடலை நான் கேட்டபோது தபால் என்ற ஒரு நல்ல நண்பனை இழந்துவிட்டது போல் ஒரு சோகம் என்னை ஆட்கொண்டது உண்மை. ஒரு காலத்தில் மக்களிடையே, ஒரு இன்றியமையாத தொடர்பு சாதனமாக இருந்த கடித முறையும் தபால் சேவையும் இன்று உருவிழந்து, பொலிவிழந்து ரயில், பஸ் டிக்கெட் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘பழையன கழிதல் என்பது நியதி என்றாலும், நமது நெருங்கிய வயதான உறவினர் இறந்தபின் வரும் ஒரு வெற்றிடம் போல் ஒரு சோகத்தை இது ஏற்படுத்துகிறது. 1966 இல் எனது பள்ளியில், எங்களை ஒரு பெரிய தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அதன் சேவைகளை விளக்கியபோது அந்த வயதில் மிக மலைப்பாக இருந்தது.  (இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான அது ஆற்றிய சேவைகளை நினைத்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது). அவர்கள் வெகு லாவகமாகவும், வேகமாகவும் தபால்களின் மீது முத்திரை குத்தும் அழகு இன்றும் என் கண்களில் நிற்கிறது. மணி ஆர்டர், தந்தி என்று பற்பல வகையான கடித வகைகளை பரந்த இந்திய கண்டம் முழுவதும் சென்றடையும்படி அவர்களின் உழைப்பு செய்தது. உலகின் மிகச் சிறந்த நாடுகளின் சேவையைவிட, நம் நாட்டு தபால் சேவை சிறப்பானது என்பது சத்தியம். எந்தக் காடு மலை மேடானாலும் தவறாது கடிதங்கள் சென்று அடையும் என்ற உத்தரவாதம் நமக்கு இருந்தது. ஒரு மிதிவண்டியைத் தவிர வேறு வாகனங்களில் தபால்காரர்கள் சென்று நான் கண்டதில்லை. மழை வெயில் காற்று என்று பாராமல் நம்மை வந்து அடையும் கடிதங்களைப் பார்க்கும்போது அதை நம்மிடம் சேர்க்கும் அந்த நபரை எப்படி மறக்க முடியும்? தபால்காரரைப் போல் ஒரு நல்ல குடும்ப நண்பர் கிடைப்பாரா என்று கிராம மக்களைக் கேட்டுப் பாருங்கள். பல படிப்பறிவில்லாத மக்களுக்கு வரும் கடிதங்களைப் படித்துக் காட்டி, அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியால் தான் வந்த மோசமான சாலையின் துன்பத்தையும் மறக்கும் அந்த தபால்காரர்கள், அவர்கள் குடும்பத்தில் ஒருவரானவர். மக்கள் அன்புடன் தரும் மோரின் குளிர்ச்சியால் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தையும் மறக்கும் அவர்கள் செய்தது ஒரு ஒப்பற்ற சேவையே ஆகும். தபால் தலைகள் சேகரிப்பு என்னும் ஒரு பொழுபோக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது என்பது இன்றும் உண்மை. அதில் ஈடுபடாத சிறுவர் சிறுமியர் அக்காலத்தில் மிகவும் குறைவு. ஒரு காலத்தில் வீதிக்கு வீதி வைக்கப்பட்ட அந்த சிவப்பு தபால் பெட்டி ஒரு கம்பீர தலைவனைப் போல் காட்சியளிக்கும். இப்போது அவைகள் எல்லாம் மறைந்து போயின. லண்டனில் இன்றும் சிவப்பு தபால் பெட்டிகள் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டிருக்கின்றன; ஆனால் நம்மூரில்?  இ மெயில் ஆக்ரமிப்பு வந்தபின்னர் நமது பழைய தபால் ‘நத்தை மெயில் என்று அழைக்கப்படுவது சோகம். நத்தை போல் மெதுவாக வந்தாலும், அந்த தபால் ஏந்தி வந்த சொந்தங்களின் கையெழுத்து பிரதிகள் நமக்கு அளித்த மகிழ்ச்சியை மின்னணு அஞ்சல் சத்தியமாகத் தர முடியாது. தாய், தந்தை, மனைவி, மகன், மகள் என்று விதவிதமான கையெழுக்களை தபால் மூலம் பார்க்கும்போது அவர்களையே நேரில் பார்ப்பது போன்ற அந்த உணர்வை இப்போது பெற முடியுமா?  சேகரித்து வைக்கப்பட்ட பழைய கடிதங்கள் ஒரு தலைமுறையின் வரலாற்றையே சொல்லக்கூடிய வல்லமை பெற்றது.  பொங்கல், புத்தாண்டு மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள் தேர்வு செய்து, வாங்கி உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் நமது கையெழுத்திட்டு அனுப்பும்போது கிடைத்த மகிழ்வு, 123 க்ரீட்டிங்ஸ். காம் மூலம் இ மெயிலில் அனுப்பும்போது கிடைப்பதில்லை. அச்சடிக்கப்பட்ட வாழ்த்து மடல்கள் எல்லாம் வழக்கொழிந்து போனது வருத்தமே. வாழ்க்கையே ஒரு விரைவு ஓட்டத்தில் எல்லோருக்கும் ஓடும்போது, தபால் என்று பழங்கதை பேசுவது  பொருத்தம் இல்லை என்றாலும், அந்த இனிய அனுபவங்களை மீண்டும் பெற முடியாது என்ற ஏக்கம் மிஞ்சுவதை, தவறு என்று சொல்ல முடியுமா?

 

Religion or Humanism?

Since 2014 in India, we see the surge of religious ‘war of words’ between different religions in the social media, as well as in the television and press media. It is worse now (at least seems to be) when compared to Shri. Atalji’s rule during 1999-2004. There are enough reasons for that. The social media network was not available at that time to spread venomous messages. Shri. Vajpayee was considered a moderate gentleman, who did not consider the RSS agenda very much. His team did not contain people whose speeches created any religious controversies. The opposition somehow accepted him and did not irritate him every other day with unnecessary protests. But Mr. Modi’s phenomenal rise to become the Prime minister of a majority govt. and almost an annihilation of the Congress and opposition parties, have created the present day chaos. Opposition is surprised that despite the unpopular steps which Modi took in economical and administrative fronts, still BJP seems to win many state elections! Hence naturally the wounded foes join together against him everywhere, and creating a hysteria about threat to other religions. Probably that is the only weapon left with them. ‘Secularism threat’ is their slogan. Some fringe Hindu religious groups who create problems in many states, help their agenda indirectly.

It is often told that all religions preach peace and they are created to help us to be good human beings. Is it so? Well, I doubt it. Religious preaching can be interpreted in different ways by different persons. It is only the religious leaders, who spoil the humanity by their wrong interpretations, and push people to the edge. I shall narrate a small story here, which I have heard in my very young age and it had occupied my heart like a carving! A guru was returning after the river bath, along with his gurukulum disciples; he was teaching them about, how God is present in every living being in the world. He told that, if a human being lives his life in a disciplined, honest and good way with respect for others, God will never punish him. On their way, they saw people running in the opposite direction, chased by a raging bull. They saw the bull’s owner shouting at them to run into the nearby houses to escape from the bull’s fury. The Guru advised all the disciples to run; but one disciple refused to do so and he told the guru that he wanted to test guru’s teaching about God. He said that if God is in every living being, He might be inside that raging bull too. Since the disciple was an honest boy, the God inside the bull would do no harm to him. Hence, despite the warning he stood in the middle of the street. The bull just hit him and threw him on the roadside. Then the guru returned back from the safe place to help him. The disciple told the guru that his teaching was wrong as the God in the bull punished him. The guru replied that the same God warned him thru the bull’s owner and others to run to a safe place. Since he didn’t listen to God’s words, but blindly believed only the guru’s words, he got the punishment!

This story taught me that blind faith in anything is not rationale. God gave human beings a special gift – the sixth sense. He has given us a good brain to see, hear, think, interpret, analyze and solve any problem. Otherwise science would not have developed to this extent. If God is kind enough to give an excellent thinking brain to us, then why can’t we use it properly?  We should not believe anything blindly and have a faith in anything blindly. Blind faith leads to fanaticism only. There are enough fanatics in every religion. Fanaticism leads to hatred against fellow human beings. Hatred leads to crimes upto terrorism! That is the reason for the chaotic state of the world today. If religion preaches violence please prepare to shun the religion. Humanism should get the priority over religion. During disaster times such as flood, storm or earthquake, religions disappear and humanism takes over all over the world. Why can’t it continue forever? Do we need disaster every time, to prove that we are human beings with good heart? Please keep your God inside your heart, keep your religion inside your house, come out and behave as persons with love and humanism. We are not born to protect religions, but to live as good human beings. There should be only one faith: faith in the fellow human being! Hence please do not spread religious hatred thru social media; discuss about protecting a good and healthy environment for us and our future generations. If you do not like a political party, show your anger in the elections. Remember, our political leaders come from us only!

Anbe Sivam! (Love is God)

 

 

 

 

 

 

வெற்றிக் கூட்டணி

தமிழ்த் திரையுலகம், தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது ஒரு காலம். இப்போது அதன் நிலையே வேறு. தமிழ்த் திரையுலகில் என்னை ஆட்கொண்ட முதல் பத்து நபர்களில் முக்கியமானவர்கள் மூவர் – சிவாஜி கணேசன், டி.எம். சௌந்தர்ராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன். இவர்களை சரித்திர நாயகர்கள் என்று நான் கொண்டாடினால் அது மிகையில்லை என்று என் தலைமுறையினர் ஒத்துக் கொள்வார்கள். இவர்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால், மூவரையும் தேசிய விருது கொடுத்து மத்திய அரசு கௌரவிக்கவேயில்லை. மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் அமர்த்தி கௌரவிக்கப்படும் இவர்களுக்கு அந்த விருதுகளால் ஒன்றும் பயனில்லை என்று கருதி அரசு அவர்களைக் கண்டு கொள்ளவில்லையோ என்னவோ! 1955 முதல் 1980 வரை, ஒரு கால் நூற்றாண்டு கோலோச்சிய இவர்கள் தமிழ் உலகுக்கு அளித்த கலைத் தொண்டு வரையற்றது.

அதிகம் கல்வி பயிலாத சிவாஜி கணேசன் எப்படி ஒரு அற்புத மேதாவியாய் திரையில் பற்பல பாத்திரங்களாய் மாறி, ஒளிர்ந்து, மின்ன முடிந்தது என்று நினைத்தால் மலைப்பாக உள்ளது. அவர் ஒரு ‘மிகைநடிப்பாளர்’  என்று சிலர் குற்றம் கூறுவார்கள். எந்த காலகட்டத்தில் என்ன மாதிரி நடிப்பு தேவையோ, அதை அவர் சரியாகக் கொடுத்தார் என்பதே என் கருத்து. அதீதமான ஒப்பனையுடன் கலைஞர்கள் பங்கு கொண்ட தெருக்கூத்தில் தொடங்கி,  நாடகங்கள் மூலம் பின்பு பயணித்து, இறுதியில் திரையுலகில் காலூன்றிய கலை உலகம், அக்கலையை மக்களின் மன நிலைக்கும் அறிவு நிலைக்கும் ஏற்ப அந்தந்த கால கட்டத்தில் கொடுத்தது. சிவாஜி போன்றோரின் நடிப்பும் அப்படி ஒரு பரிணாம வளர்ச்சியில் மேம்பட்ட ஒன்று. ஒரே கையால் ஒன்பது பேரை புவி ஈர்ப்பு விசையை மீறி வானில் தூக்கி அடிக்கும் இன்றைய ஒல்லிக் குச்சி தமிழ் நாயகர்களின் நடிப்புதான் ‘மிகைநடிப்பின்’  உச்சமே அல்லாமல் சிவாஜியின் நடிப்பு அல்ல. அவர் உருவகப் படுத்தாத கதாபாத்திரங்கள் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எந்த வேடத்துக்கும் ஏற்பதாக அமைந்த அவர் முகம் அவருக்கு கடவுள் தந்த வரப்பிரசாதம். ‘கதாபாத்திரமாக வாழ்வது’ என்பது அவரால் மட்டுமே முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. புராண – சரித்திர புருஷர்கள் தொடங்கி, ஏழை – செல்வந்தன், தொழிலாளி – முதலாளி, படித்தவன் – படிக்காதவன், இளைஞன் – கிழவன், நாயகன் – எதிர்நாயகன் என்று எத்தனை விதமான தோற்றங்கள்! திரைப்பாத்திரங்களில், அவர் தொட்ட வரம்புகளை வேறு எவரேனும் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அவரின் குரல் மற்றொரு வரப்பிரசாதம். குரலால் கூட நடிக்க முடியும் என்பதை அவரை விட வேறு யாரும் நிரூபித்ததில்லை. எந்த உடைக்கும் பொருத்தமான உடல், எந்த உணர்ச்சிக்கும் பொருந்தும் குரல், எந்த பாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்தும் முகம் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு அபூர்வ நாயகன் நம் தமிழ்த் திரை  உலகுக்குக் கிடைத்தது நமது பாக்கியம். ஒரே மாதிரியான சொறி தாடியுடனும், பரட்டைத்தலையுடனும் கையில் மதுவுடனும் எல்லாப் படங்களிலும் தோன்றும் இன்றைய தமிழ் நாயகர்களைப் பார்க்கும் தண்டனை பெற்ற என்னைப் போன்ற பெரிசுகளுக்கு பழைய சிவாஜி படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ஆறுதல் அடைவது ஒன்றுதான் வழி.

தமிழ்ப்பட இசையுலகில் ஒரு எளிய, புதிய பாணியை உருவாக்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அதை கோலோச்ச வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களையே சேரும். பின்னாளில் அவர்கள் பிரிந்த பின்னர், எம்.எஸ்.வி அந்த இசையை சிதற விடாது மெருகேற்றியது ஒரு வரலாறு. மெல்லிசையாய் இருப்பினும் கூட அதில் கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை நுணுக்கங்களையும் இணைத்து, படித்தவன் முதல் பாமரன் வரை ரசித்து, உணர்ந்து, காலத்துக்கும் அந்தப் பாடல்களை மனதுக்குள் செதுக்கி வைக்கச் செய்த மெல்லிசை மன்னரின் வித்தை, இறைவனின் அருள் என்றே சொல்ல வேண்டும். எத்தனை இசைக் கருவிகளை உபயோகித்தாலும் கவிஞரின் பாடல் வரிகளை அழுத்தாமல், சிதைக்காமல் அவற்றிற்கு உயிரூட்டிய சிறப்பு அவரையே சாரும். அவற்குப்பின் வந்த இசை ஞானிகளும் புயல்களும் தங்கள் இசைதான் பாடல் வரிகளைவிட முக்கியம் என்ற கருத்தில், கவிதைகளை நெரித்து சிதைத்ததால் அவர்களையெல்லாம் என் மனம் இன்றும், இசை மேதைகளாய் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இசையில் எத்தனையோ சாதனைகள் செய்தபோதும் தன்னடக்கத்துடன் அதையெல்லாம் விளம்பரம் செய்யாமல் தொடர்ந்து தனது பணியை செய்தவர் எம்.எஸ்.வி. அவர் கொடுத்த தாலாட்டுப் பாடல்களின் வரம்புகளும் பரிமாணங்களும் எத்தனை விதம்! காதல் – நட்பு, சிரிப்பு – அழுகை, உறவு – பிரிவு, இன்பம் – துன்பம், ஞானம் – தத்துவம், பக்தி – நாத்திகம் இதுபோன்று எந்த உணர்ச்சிகளை எடுத்தாலும் அவை அனைத்தையும் தன் இசையால் ஆக்ரமித்தவர் அவர். அவரது இசை பரிமளிக்க மற்றொரு முக்கிய காரணகர்த்தா கவிஞர் கண்ணதாசன்; அவரது  உயிரோட்டமான கவிதை வரிகளை இவரது இசை மெருகேற்றியதா, அல்லது இவரது இசையை அவர் கவிதைகள் தூக்கி நிறுத்தியதா என்றால் என்னிடம் பதில் இல்லை. ஆனால் இரண்டும் கச்சிதமாக இணைந்து காலத்தை வென்று நிற்கிறது என்பது மட்டுமே சத்தியம்.

‘ஆஹா! குரல் என்றல் இதுவல்லவோ ஒரு ஆண்மைக்குரல்’ என்று எல்லோரையும் கவர்ந்த ஒரு குரல், திரு. டி. எம். சௌந்தர்ராஜன் அவர்களது என்றால் நாம் மறுக்க முடியாது. தமிழ் தனது தாய் மொழியில்லை என்றபோதும் அதை அற்புதமாகப் பயின்று பாண்டித்யம் பெற்றவர் அவர். சுமார் முப்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த அவர், பின்னணி பாடாத நடிகர்களே தமிழில் இல்லை எனலாம். குறிப்பாக எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு அவரது குரல் எப்படி கன கச்சிதமாகப் பொருந்தியது என்பது இன்றும் வியப்புக்குரியது. இவரது குரலும் சிவாஜியைப் போல் அற்புதமாக நடிக்கக் கூடியது. இவரது சிறப்பே இவரது குரல் தொனியாகும். எந்த சூழ்நிலைக்கும் ஏற்ற பாவங்களை இவர் குரலில் காணலாம். வேறு எந்த பின்னணிப் பாடகருக்கும் கிடைக்கப் பெறாத ஒரு பாக்கியம் அது. அதுவே அவர் பாடல்களுடன் நம்மை ஒன்றை வைக்கும். உச்ச ஸ்தாயியில் வெகு அலட்சியமாக அவரால் குரல் சிதைவின்றி உச்சரித்துப் பாட முடியும்; அதே வேளை மிக மெல்லிய அமைதியான குரலிலும் பாட முடியும். சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற கம்பீரமான நடிகர்கள் இருந்த காலத்தில் இவர் குரல் வளத்துக்கு ஒரு நல்ல களம் இருந்தது. பக்திப் பாடல்கள் உலகையும் இவர் விட்டு வைக்கவில்லை. இவரது முருகன் பாடல்கள் காலம் கடந்து நிற்பவை. எப்படிப்பட்ட நல்ல குரல்களாலும், நல்ல கவிஞர்களாலும் ,இசைஅமைப்பாலும், நாம் பல அற்புதப் பாடல்களை அந்நாளில் கேட்டு ரசிக்க முடிந்தது! சிவாஜி, கண்ணதாசன், விஸ்வநாதன், சௌந்தர்ராஜன் வெற்றிக் கூட்டணி அமைந்த 1950-80 தமிழ்த் திரையுலகின் ஒரு பொற்காலம் என்பது மறுக்க முடியாத உண்மை. அது போன்ற ஒன்று மீண்டும் அமைய வாய்ப்பே இல்லை.

இன்றைய தமிழ்த்திரை உலகம் இந்த ஆசான்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒரு கலைவிழா நடத்தலாம். அவர்களது படைப்புகளை எல்லாம் சேகரித்து ஒரு திரை அருங்காட்சியகம் அமைக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். மலேஷியா மற்றும் இலங்கை தமிழர்கள் கூட இவர்களது சிறப்பை உணர்ந்து போற்றும் காலத்தில் நம் திரையுலகம் இவர்களை அலட்சியமாக மறக்கும் சரித்திர அவலத்தை நாம் என்னவென்று சொல்வது. எல்லா நாடுகளிலும், ஏன், நம் வடநாட்டிலும் கூட அந்நாள் திரையுலக ஜாம்பவான்களையும் மேதைகளையும் போற்றிப் பாதுகாக்கும் போது நம் தமிழர்களை நினைத்தால் மனம் வெட்கப்படுகிறது. எவன் வேண்டுமானாலும் நடிக்கலாம், பாடலாம், இசைஅமைக்கலாம் என்று ஆகிவிட்ட இந்நாளில் இத்தகைய மேதாவிகளிடம் நாம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது நமது மடத்தனம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

 

 

 

 

Whom to Punish?

 
Last Sunday, while I was trying to find the parking place for my car at the supermarket in the old Mahabalipuram road, I happened to see a 12 year old boy riding a Honda activa scooter approaching towards my car. On seeing the panic sign on his eyes, I stopped my car and got down. Then I saw a lady in the pillion who tried and stopped the scooter just opposite to my car. I was profoundly sad to see such a scene. I told the lady politely that, it was very wrong to allow such a small boy to ride a scooter at that age. Her answer was that she was with him to guide. The answer irritated me and I had to raise my voice and tell her that it was not only illegal but also immoral to guide children in the wrong way. She apologized and told that she could not manage him, as he was very adamant to drive the vehicle. I replied that whatever the reason might be, still it was absolutely wrong to allow him to ride and that too on the wrong side of the 4 lane main road. After giving her required advice, I casually asked her job. The answer shocked me to the core. She was a teacher in a high school. I prayed to God (not only) to save her son but also all the students trained by her! Probably she is the role model teacher & mother for future India!
It is a common sight nowadays in Chennai, to see small school boys and girls under 15 riding two wheelers without license. The scenario must be the same in other cities and towns too. I wonder how their parents allow it and how the schools turn a blind eye to it. Blatant violation of rules and moral guidelines were seen in adult population only, so far. Now the painful development is that, it has spread to underage kids too. People who were born during 1975-80 must be the proud parents of such kids. Probably they want their children to be advanced in learning everything! Otherwise how do we explain the presence of mobile phone on a three year old child’s hands? Why the society has become so aggressive to handle the modern developments? We cannot blame these children. They would be naturally attracted towards such gadgets, but it is the moral obligation and responsibility of the parents to monitor their children and guide them in the right direction. A new Indian penal code (IPC) section must be made to punish the parents of such children who violate the rules and compromise the safety of people on the road. Every day we read about the tragic accidents involving such teenage kids on the road. Yesterday, some young boys not only rode bikes, but were racing with them on a busy Chennai road, knocking down a poor servant maid lady to death. In a split second, the fate of the lady who is a bread winner of a family and the boy who caused her death changed to hell. Hence as a doctor, my sincere request to all the parents is to monitor their kids, not to yield to bad requests from them and guide them towards their social responsibilities.

Politician ‘Style’

My state Tamilnadu, predicts that one more person is going to join the bandwagon of already existing wonderful group of politicians! Yes, the so called ‘Super star’ Mr. Rajnikant is (as usual) threatening to enter ‘politics’ to purify my state from corruption and inertness. Even-though it is not new to us, that whenever his film is due for release or celebration, he used to utter this threat, I feel that now he has a strong temptation to do it at last. One solid reason I could find out is, that the two strong politicians of Tamilnadu, Mr. Karunanidhi and Ms. Jayalalitha are not in the scene anymore. Probably this is an ideal time for him to try his luck in the political game. Like anybody else who joins politics, he also has clearly stated that he will not tolerate anybody to enter politics to amass wealth or indulge in corruption. I felt the ‘dejavu’, as similar statements were made by Late Chief minister Mr. M.G.R in 1977. All the media in my state (and even national media too) are busy to have debates and guessing games on this. Now one question in everybody’s mind is whether the centrally ruling BJP will woo him to join them, as it may give them a good chance to enter Tamilnadu politics. Behind the scene discussions must be going on; otherwise also it may not be difficult for them. People who know the present day Indian scenario will know what I mean!

Tamilnadu people have chosen to select their Chief Minister (CM) from Tamil film industry since 1967 as all the five CM from 1967 to 2016 were from film industry. I don’t know whether it is a stuff for Guinness records; any psychiatrist or psychologist can do a Ph.D. on the state of mind of us as to why we prefer people from ‘show business’ to rule us. I know that the cine medium could be powerful in spreading messages and fashions but our state people have become addicted to believe that the ‘reel heros’ are ‘real heros’ in life. USA stopped with one President and Governor from films (Indian influence)? But we could not be stopped. In most of the other states in India, this trend is not seen. Another interesting trend with our state people is to accept persons from other state to rule us. This shows our broad-mindedness as we accept any citizen of India. We are not linguistic or cultural fanatics. Even Mr. Rajnikant stated that he spent > 40 years of his life in Chennai and he has right to call himself a ‘Tamilian’ (even-though he still cannot talk good Tamil).

Mr. Rajnikant is adored by his fans (of all ages), and believed to be a good, religious, open minded and honest person even by others who are not his fans. I wonder how they come to such conclusion. According to me, he is a good entertainer. He has good acting talent, but he does not waste his energy on that, as his mere presence, style and ‘punch’ dialogues alone are enough for his fans. He did not even make any long standing memorable social awareness film so far. As nowadays we talk about ‘corporate-social responsibility’, as a senior man in the industry he has never participated in any social activities or at-least give his opinion on any issues that our state face. He commented to his fans that as a ‘Tamilian’ he has realized his responsibility to contribute to the state now. His fans are recollecting his old ‘punch’ dialogues in films and cheer him to proceed. But with his state of mind, I am not sure whether he can withstand today’s politics independently. But it is interesting to note that all politicians of Tamilnadu are responding to his statements. Are they jittery that he could erode their vote banks as his fans are almost in every political party? (Some time ago Mr. Vijayakant, another actor-politician did that and became the opposition leader in our state legislative assembly).

The problem with democracy is that any citizen irrespective of age, gender, religion or literacy can become a chief minister. Yes, Mr. Rajni has every right under the constitution to aspire to become CM of any state. As I said, we are broad minded and strong hearted people. If one more CM is from the film world, we can tolerate him too, as we got used to it for the last 50 years. We will sincerely believe that our hero will save us, the poor people, from evil and corruption as he does in his films!

God bless my state!